Description
- தேன் ஒரு தொழிற்சாலையின் உற்பத்தி பொருள் அல்ல. எப்போதும் ஒரே சுவை, ஒரே நிறம், ஒரே அடர்த்தி, ஒரே மணம் என்று விற்கமுடியாது. பூக்களின் நறுமணத்தை உண்டு செரித்து தேனீக்கள் வயிற்றிலிருந்து கக்குவதே தேன்.
- சுவை, நிறம், அடர்த்தி, மனம் ஆகிய நான்கும் மாறாமல் இருப்பது சாத்தியமில்லை.
- நம்பகமான சாட்சி நவீன பரிசோதனை கூடத்தின் அறிக்கை இவற்றின் அடிப்படையில் கலப்படமில்லை என்பதை உறுதி செய்கிறோம்.
- சில நேரங்களில் தேனின் சத்துக்கள் பாதிக்கப்படாத படி லேசாக சூடாக்கி வடிகட்டவும் செய்கிறோம். காரணம், தேன் கூட்டின் மெழுகு துணுக்குகளையும், இறந்த தேனீக்கள், அவற்றின் இறக்கைகள், கால்கள், வயிறுகள், தூசு துப்பட்டைகள் ஆகியவற்றையும் இப்படித்தான் நீக்க வேண்டியுள்ளது.
- தேனை காய்ச்சாமல் பச்சையாக இருக்கும்போது சில சமயங்களில் அது கெட்டித்தன்மை இல்லாமல் இருக்கலாம், உறையலாம், நுரைக்கலாம் ஆனால் இதுதான் பரிபூரண ஊட்டச்சத்தும் மருத்துவக் குணம் உடையது ஆகும்.
Reviews
There are no reviews yet.