Description
கதை சொல்லும் பாணியில்தான் நபிகள் நாயகத்தின் வரலாறு நம் பள்ளிக்கூடங்களிலும், பள்ளிவாசல்களிலும் கூறப்பட்டு வந்திருப்பதை நாம் பகுப்பாளிணிவு செய்ய இந்த நூல் தூண்டுகிறது. அவ்வகையில் நம்மில் அனைவரும் குறைவாகவோ, கூடுதலாகவோ நபிகள் நாயகத்தை அறிந்திருப்போம்.
அவை வெறும் தகவல் திரட்டு என்று உணர வைக்கும் பத்தி, நம்மை பதற வைக்கிறது. எடுத்துக்காட்டாக பள்ளிவாசலுக்கு இறைத்தூதர் வந்திருந்தால், நாம் அண்ணலாரை அடையாளம் கண்டுக்கொள்வோமா?
அதைவிடப் பெரிய கேள்வி, அண்ணலாரிடம் சென்று “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு முஸ்லிம், உங்களுடைய உம்மத் என்று நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டால், இறைத்தூதர் நம்மைப் பார்த்து என்ன கூறியிருப்பார்? என்கிற மிர்சா யாவர் பெய்க்கின் எழுத்துக்களை எதிர்கொள்ளவே முடியவில்லை.
நாம் கைவிடவும், மாற்றிக் கொள்ளவும், தொடர்ந்து செய்யவும், வலுப்படுத்த வேண்டிய சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் மற்றும் நடத்தைகளை பட்டியலிட அறைகூவுகிறது. இதை எதிர்கொள்ள விழைவோரின் வாழ்க்கை இறைத்தூதர் வழியில் அமைந்துவிடக் கூடும்.
இந்நூல் வாசித்து ரசிக்க அல்ல, நடந்துகொள்ள என்பது மட்டும் நிச்சயம்.
Reviews
There are no reviews yet.