தூது வந்த வீரர் | இஸ்லாமும் மேற்கு நாடுகளும் 2 in 1

200.00

வரலாற்று விற்பன்னர் தாமஸ் கார்லைல் வழங்கிய பேருரை

தூது வந்த வீரர்

Islam and The West என்ற  தலைப்பில் இளவரசர் சார்லஸ் ஆற்றிய உரை

இஸ்லாமும் மேற்கு நாடுகளும்

Category:

Description

வரலாற்று விற்பன்னர் தாமஸ் கார்லைல் வழங்கிய பேருரை

தூது வந்த வீரர்

தாமஸ் கார்லைல்(1795-1881) : வரலாறு என்பது எடுத்துக் காட்டுகளால் போதிக்கப்படும் தத்துவம்; அறநெறிகளையும் ஆன்மீக மேன்மைகளையும் பரப்பும் தளம் என்பதை நிறுவிய வரலாற்று வல்லுநர். இவருடைய எழுத்தும் சொற்பொழிவுகளும் உலக இலக்கிய வரிசையில் இடம் பெற்றுள்ள உயரத்தைத் தொட்டவை. லண்டன் மாநகரில் இவர் ஆற்றிய “on Heroes Hero Worship and The Heroic In History” என்ற பேருரையின் மூலம் அகில உலக அதிர்வுகளை ஏற்படுத்திய இலக்கிய விற்பன்னர். நன்னயம் மிக்க கிறிஸ்தவரான இவர் தம் நூலில் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குச் சிறப்பிடம் தந்த எண்ண விசாலம் மிக்க தத்துவ மேதை. மாமேதைகளாலும் மன்னர்களாலும் மதிக்கப்பட்ட மாண்பாளர்.

 

Islam and The West என்ற  தலைப்பில் இளவரசர் சார்லஸ் ஆற்றிய உரை

இஸ்லாமும் மேற்கு நாடுகளும்

இங்கிலாந்து நாட்டின் பட்டத்து இளவரசரான சார்லஸ், பொறுப்பு மிக்க ஓர் உலகக் குடிமகன் என்ற மதிப்பிற்குரி யவர். மனிதாபிமானம், சமூகப் பிரச்சனைகள், மாற்று மருத்து வம், அற நிறுவனங்கள், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, சமய நல்லிணக்ம், நாடுகளுக்கிடையிலான நல்லுறவு முதலியவை தொடர்பான பண்முகப் பணிகளில் ஈடுபடுவதற்குத் தம்முடைய செல்வாக்கைப் பயன்படுத்தி வருபவர். பன்னூல் ஆசியராக மட்டுமின்றி அறிஞர்களின் பல நூல்களுக்கு அணிந்துரைகளும் அளித்து வருகிறார். வைதீகக் கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் அமைந் துள்ள இஸ்லாமிய ஆய்வு மையத்தின் புரவலரும் ஆவார். அங்கே இவர் Islam and The West என்ற தலைப்பில் ஆற்றிய உரை இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.

Additional information

Weight .450 kg
Dimensions 1.5 × 14 × 21.5 cm
Pages

224

Author

Yembal Tajammul Mohammad

Paper

70gsm Imported paper

Cover

Soft Cover

Publisehr

New Light Book Centre

Reviews

There are no reviews yet.

Be the first to review “தூது வந்த வீரர் | இஸ்லாமும் மேற்கு நாடுகளும் 2 in 1”