ஏக இறைவனை நோக்கி… | Yega Iraivanai Nokki…

120.00

தமிழறிந்தார் அனைவருக்குமான நூல்

Category:

Description

தமிழறிந்தார் அனைவருக்குமான நூல்
“இன்றைய சூழலை மனதிற்கொண்டு மிக்க பொறுப்புடன், நல்ல தமிழில், உரிய ஆதாரங்களுடனும் விளக்கங்களுடனும் இந்த உரைகள் ஆற்றப்பட்டு, இப்போது நூலாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. அழைப்பாளர்களுக்கு அதற்கான பயிற்சியை மிகச் சிறப்புடன் செவ்வனே அளித்துள்ளார் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்கள். அவரது பரந்த நூலறிவு இதில் அவருக்குத் துணை நின்றுள்ளது. அழைப்புப் பணியாளர்களுக்கு மட்டுமின்றி இஸ்லாம் குறித்து அறிய விரும்பும் யாருக்கும் இது ஒரு நல்ல கையேடாகப் பயன்படும் என்பது உறுதி.” – பேராசிரியர் அ.மார்க்ஸ்

“சமய வளர்ச்சியும் ஓர் இறைக்கோட்பாடும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்கு எவ்வகையில் பங்களிப்புச் செய்யலாம் என்பதை உணர்த்துவதாக இந்த நூல் நிறைவு பெறுகிறது. அத்துடன் ஆன்மீக எண்ணங்களுக்காக மட்டுமின்றி வாழ்வு நிலையின் உண்மையாக இருக்கும் பௌதீக உலக வெற்றியை இந்நூல் மறுத்துரைக்கவில்லை. வாழும் சமய நெறி ஒன்றிற்கான முக்கிய பிணைப்பு அது… ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களின் அறிவு சார்ந்த சமூக-சமய நற்பணிகள் தொடர வேண்டும்.இதுவே எனது பிரார்த்தனை”. – பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ்

“எதிர் கருத்தை விமர்சனமாக வைக்காமல், போகிற போக்கில் மரியாதையுடன் குறிப்பிட்டுச் செல்லும் பாங்கு பாராட்டத்தக்கது. மனிதகுல வரலாற்றைப் பற்றிய பத்தியில், ‘குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்தை மறுக்கும் ஆசிரியர் அதைப்பற்றிக் குறிப்பிடும் போது ‘மெத்தப் படித்த மேதைகளோ, மனிதகுல வரலாற்றைக் குரங்கிலிருந்தும் காட்டுவிலங்காண்டிகளிலிருந்தும் தொடங்கியுள்ளனர். இந்தக் கண்ணோட்டத்தால் மனித குலம் எதிர்கொண்ட இழப்புகள் ஏராளம்’ என்று சொல்வது நாகரீகமான எழுத்தோட்டத்திற்குச் சான்று”. – பேராசிரியர் நாகூர் ரூமி

“இந்த உலக வாழ்வு ஒரு சோதனை;இறைவனை நம்பி அவன் காட்டியுள்ள வழியில் வாழ எல்லா வகையிலும் முயன்று நல்வாழ்வு வாழ்ந்து கொண்டே மறுமைக்கான வெற்றியைத் தேடிக் கொள்வதே சாதனை; அதற்காக அருளப்பட்டவையே வாழ்வின் எல்லாத் துறைகளையும் அளாவிய இஸ்லாம் மார்க்கத்தின் போதனை’ என்ற நூலாசிரியரின் சிந்தனைக்கேற்ப ஒவ்வொருவரும் இந்நூலைப் படித்துப் பிறருக்கு அன்பளிப்பாக வழங்கினால் சமூகத்தில் மிகப்பெரும் மாற்றம் நிகழும் என்பது நிச்சயம் இன்ஷாஅல்லாஹ்…” – பேராசிரியர் அ.பா.கலீல் அஹமது பாகவீ

Additional information

Weight .250 kg
Dimensions 1 × 14 × 21.5 cm
Author

Yembal Tajammul Mohammad

Pages

120

Paper

70gsm NS

Cover

Soft Cover

Publisher

New Light Book Centre

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஏக இறைவனை நோக்கி… | Yega Iraivanai Nokki…”