Description
தலித் மக்களின் விடுதலைப் பேறு (Emancipation of Dalit People – A Historical View) எனும் இந்த நூல், பல மணம் கமழும் மலர்களைப் பறித்தெடுத்து, பக்குவப்படுத்தி, திரவ வடிவில் நறுமணம் வீசும் வாசனைத் திரவியமாக ஆக்குவது போலப் பல்வேறு அறிஞர்கள், தலைவர்கள் முதலியோரின் அரிய கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து தெளிவான முறையில் யாவருக்கும் ஏற்புடையதாகவும் ஈர்புடையதாகவும் ஏகத்துவ ஒருமைப் பாட்டின் அழைப்பிதழாக யாத்தெடுக்கப்பட்டிருக்கிறது.
மனிதனை மனிதன் பார்க்கும்போதும் பழகும்போதும் சக மனிதனை சகோதரத்துவத்தோடும் சமத்துவமாகவும் மனப்பூர்வமாக உணரவைக்கும் மகத்தான வாழ்க்கை நெறிதான் இஸ்லாம் என்பதை இந்த நூல் சுருக்கமாகவும் உருக்கமாகவும் உணர்த்துகிறது.
Reviews
There are no reviews yet.